search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் வாலிபர் தாக்குதல்"

    சேலம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி, அய்யன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடை உரிமையாளரிடம் தனது சம்பளத்தை கேட்டார். அதற்கு கடையில் இருந்த செல்போன் காணவில்லை. அதை நீதான் எடுத்திருப்பாய். எனவே உனக்கு சம்பளம் தர முடியாது எனக் கூறி 3 பேர் சேர்ந்து அவரை தாக்கியதாக தெரிகிறது.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீராணம், நேரு நகரை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (வயது 33), வீராணம் மூர்த்தி (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றொருவரான ஆந்திரா ரமேஷ் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சேலம் அருகே மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் காரை நிறுத்தியதால் மோதலில் வாலிபரை தாக்கிய கார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சின்ன கொல்லப்பட்டி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் இளைய ராஜா(37). இவர் நேற்று முன்தினம் கொண்டப்ப நாயக்கன்பட்டி வார சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சந்தைக்கு சென்று மீண்டும் வந்து பார்த்த போது அவரின் வாகனத்தை எடுக்க முடியாதபடி அருகில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் கார் உரிமையாளர் வரும் வரை வெகு நேரம் காத்திருந்தார். பின்பு கார் உரிமையாளரிடம் ஏன் இப்படி எனது வாகனத்தை எடுக்க முடியாதபடி உங்கள் காரை நிறுத்தினீர்கள் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டார். பின்பு இது கைகலப்பாக மாறியது.

    இளையராஜாவை கார் உரிமையாளர் மற்றும் அவருடன் வந்திருந்த பார்த்திபன் ஆகியோர் கடுமையாக தாக்கினர். இது குறித்து இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் கொண்டப்ப நாயக்கன்பட்டி, முயல்நகர் பகுதியை சேர்ந்த கார் உரிமையாளரான சரவணன்(28) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் சரவணனின் மனைவி, தகராறு நடக்கும் போது நான் தடுக்க சென்றேன். அப்போது இளையராஜா தன்னை தாக்கியதாக அவர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் இளையராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் மண்டை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் வழியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது.

    இந்த பங்க் அருகே நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ் டிரைவர் பாலு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது கையில் இரும்பு ராடுடன் 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென பாலுவின் தலை, கை, கால் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்கினார். மேலும் அந்த வழியாக சென்ற காரின் கண்ணாடியையும் உடைத்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் அந்த நபர் சரமாரியாக தாக்கினார். ஆனாலும் சுற்றி வளைத்து பிடித்த அவர்கள் அந்த நபரை பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலையில் பலத்த காயம் அடைந்த பாலு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×